யாழ் போதனாவுக்கு Dr. ரமேஷ் பத்திரனவுடம் உயர் அதிகாரிகள் வருகை!📸

 


யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் கௌரவ Dr. ரமேஷ் பத்திரன மற்றும் உயர் அதிகாரிகள் வருகை தந்தனர்.

.................................................................................

இன்றைய தினம் காலை கௌரவ சுகாதார அமைச்சர் Dr. ரமேஸ் பத்திரன அவர்களும் சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P. மகிபாலா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. அசேல குணவர்தன மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் வருகை தந்தனர். 


அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் வைப்பவரீதியாக வரவேற்கப்பட்ட அமைச்சர் மற்றும் குழுவினர் வைத்தியசாலை முன்றலில் ஞாபகார்த்தமாக மரங்களை நாட்டி வைத்தனர். 


பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு வழங்கப்படுகின்ற சேவைகள் பற்றி கடமையில் இருந்த வைத்திய நிபுணர்கள் மற்றும் குழுவினருடன் கலந்துரையாடி சேவைகள் பற்றி தெரிந்து கொண்டார்கள். அவசர சிகிச்சை பிரிவானது 24 மணி நேரமும் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றது.


குறிப்பாக விபத்துக்கள் ஏனைய நோய்களினால் அம்புலன்ஸ் வண்டிகளின் ஊடாக கொண்டு  வரப்படுகின்றவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை வழங்கப்படுகின்றது. இதற்காக ஆறு விசேட கட்டில்களும் அதற்கான அனைத்து உபகரண வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றது. இதனுடன் மேலதிகமாக 20 படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை நிலையமும் இயங்குகின்றது.


இக்கட்டடத்தின் முதலாம் மாடியில் இயங்கும் நரம்பு சத்திர சிகிச்சை விடுதி பகுதியை பார்வையிட்ட குழுவினர் வடபகுதியில் பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்ற விபத்துக்களின் மூளை இரத்தக்கசிவு, தலைக்காயங்கள், மூளையில் ஏற்படுகின்ற கட்டிகள் போன்றவற்றிற்கான சிகிச்சை செய்யப்படுகின்ற ஒரே ஒரு மையமாக காணப்படுகின்றது. இதனுடைய செயற்பாடு மிகவும் முக்கியமானது என்பதை தெரிந்து கொண்டனர். 


பின்னர் சுகாதார அமைச்சர் அவர்கள் வைத்தியசாலையின் காது மூக்கு தொண்டை கிளினிக் பகுதி, என்புமுறிவு சத்திர சிகிச்சைப் பகுதி, பற்சிகிச்சை பிரிவுகள் பகுதி என்பவை அமைந்திருக்கும் கட்டிடப் பகுதியை பார்வையிட்டு எதிர்வரும் காலங்களில் இதற்கான போதிய வசதிகள் கொண்ட கட்டிடத்தின் அவசியம் பற்றி கலந்துரையாடினார். 


பின்னர் வைத்தியசாலையின் பிரதான கட்டிடத்திற்கு முன்னால் 8  வருடங்களுக்கு முன்னர் Dr. மகிபாலா வருகை தந்த போது அவரினால் நாட்டப்பட்ட மரத்தினை பார்வையிட்ட குழுவினர் வைத்திய சாலையில் மரங்களை சிறப்பாக  பராமரிப்பது பற்றி தன்னுடைய பாராட்டை உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தார். 


வைத்திய நிபுணர் செல்வகணேஷ் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலையில்  மரங்களை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான ஆலோசனை  மற்றும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்."


பின்னர் வைத்தியசாலையின் மத்திய கட்டிட தொகுதியின் கீழ் தளத்தில் சிறப்பாக இயங்குகின்ற நலன்புரி நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் அது பற்றி  தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். 


மத்திய கட்டிட தொகுதியின் முதல் தளத்தில் இயங்குகின்ற பிரதான சத்திர சிகிச்சை கூட  தொகுதியை சென்ற அமைச்சர் குழுவினர் அமைச்சினால் வழங்கப்பட்ட 75 மில்லியன் பெறுமதியான இயந்திரத்தை  கையளித்து அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி சத்திர சிகிச்சை சேவைகள் பற்றி தெரிந்து கொண்டார். அத்துடன் அர்ப்பணிப்போடு கடமை புரிகின்ற அனைவருக்கும் தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். கடந்த வருடம் 26,000 சத்திர சிகிச்சைகள் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.


மத்திய கட்டிட தொகுதியின் இரண்டாம் மாடியில் இயங்கும் ஆய்வுகூட பகுதிக்கு சென்ற குழுவினர் ஆய்வு கூட சேவைகளின் சிறப்பு பற்றி கலந்துரையாடினார்.


 இலங்கையில் இருக்கும் அரச வைத்தியசாலைகளின் முதற்தர ஆய்வு கூடம் எனும் சிறப்பை பெறுகிறது.


அங்கிருந்து புனருதாரண சேவைகள்(Rehabilitation services ) நடைபெறுகின்ற கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடிக்கு சென்றடைந்த குழுவினர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை பகுதியை திறந்து வைத்தார். இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக விளங்குகிறது.இருவர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் மேலும் சிக்கல் வழங்குவதற்கான அடுத்த வேலைகள் நடைபெறுகின்றது.

மாதம் ஒன்றில் இதுவருக்கு இந்த சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் காணப்படுகின்றது.


இப் பிரிவில் கடமையாற்ற இரு வைத்தியர்களை சுகாதார அமைச்சு நியமித்திருக்கின்றது.


பின்னர் சுகாதார அமைச்சர் மற்றும் குழுவினர் Dialysis unit Cath lab  பகுதிகளை பார்வையிட்டு கடமையில் இருந்த இருதய நிபுணருடன் கலந்துரையாடினர்கள்.

இதன்போது 13 வருடங்கள் பழமை வாய்ந்த இயந்திரத்தை மாற்றி புதிய இயந்திரம் ஒன்றை எதிர்காலத்தில் வாங்கி தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.  இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் Angiogram and coronary angioplasty and stent அதிகளவில் வழங்கப்படும் மூன்றாவது பெரிய நிலையமாகும்.


பின்னர் சிறப்பான முறையில் இயங்குகின்ற போதனா வைத்தியசாலை அருங்காட்சியகத்தில் காணப்படுகின்ற ஆவணங்கள், உபகரணங்கள், பழமை வாய்ந்த புத்தகங்களை என்பவற்றை பார்வையிட்ட குழுவினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். 


சுவாதார அமைச்சின் குழுவினர் நெரிசலாக இயங்கும் இருதய விடுதிப்பகுதி, மருத்துவ கட்டிட தொகுதி, விடுதிகள் சிறு பிள்ளைகள் பராமரிக்கும் பிரிவு, சத்திர சிகிச்சை விடுதிகள் பகுதி என்பவற்றை பார்வையிட்டு  வைத்திய சாலையிலைக்கு புதிய கட்டடத் தொகுதி  அமைப்பதன் அவசியத்தை தெரிந்து கொண்டார். 


பின்னர் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடல் தாதிய பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. 


வைத்திய சாலையில் எதிர் நோக்குகின்ற சவால்கள் பற்றிய கலந்துரையாடலில் பலரின் கேள்விகளுக்கு கௌரவ அமைச்சர் அவர்களும் செயலாளர் அவர்களும் பதிலளித்தனர்.  குறிப்பாக மகப்பேற்று கட்டிட தொகுதி மற்றும் இருதய சிகிச்சை கட்டிட தொகுதி அமைப்பின் அவசியத்தை உணர்ந்து எதிர்வரும் வருடத்தில் கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதற்கு நிதி ஒதுக்கீட்டை செய்ய முடியும் என கூறினார்.


சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களின் உரையில் வைத்தியசாலையின் செயற்பாடுகளை பாராட்டி பேசினார். வைத்திய சேவையின் ஆளணியை அதிகரித்தல், உபகரணங்கள் வழங்கல் மற்றும் சேவைகள் மேம்பாட்டு உதவிகளை வழஙக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


சுகாதார அமைச்சர் மகப்பேற்று கட்டிடத் தொகுதி அமைப்பதற்கான நிதியினை எதிர்வரும் ஆண்டில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

போதனா வைத்தியசாலை சேவைகளை பாராட்டினார்.


 சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளர்  வைத்தியசாலையின் சிறப்பு சேவைகளை பாராட்டி எதிர்வரும் காலத்தில் ஆளணியை அதிகரித்து மேலும் வாகனங்களை வழங்குவதற்கான நிதியயை விடுவிப்பதாகவும் கட்டிட தொகுதியின் அபிவிருத்திக்கும் சுகாதார அமைத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இப்பகுதியில் இருக்கின்ற ஒரே ஒரு சிறப்பு வைத்தியசாலை சிறப்பாக இயங்குவதற்கு கடமை உணர்வோடு செயல்படும் வைத்தியர்கள் என உத்தியோகத்தர்களுக்கு பாராட்டையும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


சுகாதார அமைச்சர் குழுவினரின் மேற்படி விஜயம் மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கும் பகுதிகளை பார்வையிட்டமை வைத்தியசாலை சேவைகளை மேம்படுத்தவும் குறைபாடுகளை நீக்கி சிறப்பான சேவையை வழங்க உதவியாக இருக்கும்.


குறிப்பாக சுகாதார அமைச்சர் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அநேகமான பகுதிகளை சுறுசுறுப்பாக சென்று பார்வையிட்டு அங்கு உள்ளவர்களுடன் ஆர்வத்துடன் கலந்துரையாடியமை வியக்கத்தக்கது. அத்துடன் அவர் சென்ற வழிகள் நின்ற மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் தாதிய பயிற்சி மாணவர்களிடமும் அவர்களின் படிப்பு பற்றி கேட்டறிந்து கொண்டார்.  சுகாதார அமைச்சர் மற்றும் குழுவினரின்  இரண்டரை மணி நேர விஜயம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 


மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ. அங்கஜன் ராமநாதன் மற்றும் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்


அமைச்சர் ஒருவர் எந்த ஆரவாரமும் இல்லாமல் மிக கரிசணையோடு நடந்து கொண்டதை கண்டோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.