கணவன் - மனைவி உறவு நீடிக்க சாணக்கிய நீதி!!
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர். சாணக்கிய நீதியின் படி, கணவன்-மனைவி உறவில் சுமூகம் இருக்க வேண்டும்.
தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாத போது ஒருங்கிணைப்பு இருக்காது என கூறப்படுகிறது. அத்துடன் நிம்மதி இல்லாத வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார் எனவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில், கணவன் - மனைவி சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. கணவன் - மனைவி உறவில் எப்போதும் மதிப்பு, மரியாதை இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் தம்பதிகளுக்கு இடையே உள்ள மரியாதை உறவு தான் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தும். உறவில் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும் என்றால் கணவன் - மனைவி இருவருமே வெளியில் அல்லாமல் வீட்டிலும் மரியாதையாக இருக்க வேண்டும்.
2. சாணக்கியரின் கூற்றுப்படி, திருமண வாழ்க்கையின் வெற்றி அவர்களின் பொறுமை தான் இருக்கிறது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பொறுமையாக கையாள வேண்டும். பாதகமான சூழ்நிலைகளில் கட்டுப்பாடில்லாமல் செல்லும் கணவன்-மனைவி இடையேயான உறவில் விரிசல் உண்டாகும் என சாணக்கியர் கூறுகிறார்.
3. தற்போது இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையில் ஈகோ இருக்கவே கூடாது. கணவனும் மனைவியும் சேர்ந்து எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வலுப் பெறும். தம்பதிகளிடையே ஈகோக்கள் வளரத் தொடங்கும் போது உறவில் விரிசல் விழ ஆரம்பிக்கும்.
4. கணவன்- மனைவிக்கிடையே பலவிதமான விஷயங்கள் தினமும் நடக்கும். இவற்றை ரகசியமாக வைத்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி, கவலை இப்படி அனைத்தையும் ரகசியமாக வைத்து கொள்ளவும். திருமண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை மூன்றாவது நபருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது மீறினால் மூன்றாவது நபர் விளையாடி விட்டு சென்று விடுவார்.
கருத்துகள் இல்லை