அந்தரத்தில் படம் எடுத்த காதல் ஜோடி!!

 


ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து ஒரு காதல் ஜோடி 'போட்டோஷூட்' நடத்தி உள்ளனர்.

இது குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.


அதில் ஒரு ஜோடி, பள்ளத்தாக்கு பகுதியில் ரோப் காரில் அமர்ந்துள்ளனர். பார்ப்பதற்கு டைனிங் டேபிள் வடிவில் அமைக்கப்பட்ட அந்த ரோப்பில் அமர்ந்து தம்பதியினர் கேபிளை பிடித்தபடி பேசுவது போன்று காட்சிகள் உள்ளது.


இந்த வீடியோ வைரலானதை அடுத்து 69 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை பார்த்துள்ளனர்.வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.