தாளிப்பு வடகம் செய்வது எப்படி ..??


தேவையான பொருட்கள்
:

 

1/2கிலோ சின்ன வெங்காயம்

2பெரிய பூண்டு

2டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு

3டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு

2டேபிள் ஸ்பூன் கடுகு

2டேபிள் ஸ்பூன் சீரகம்

1.5டேபிள் ஸ்பூன் வெந்தையம்

1ஸ்பூன் மஞ்சள் தூள்

1ஸ்பூன் பெருங்காய தூள்

1கைப்பிடி கறிவேப்பிலை

1ஸ்பூன் நல்லெண்ணெய்

2ஸ்பூன் விளக்கெண்ணெய்


செய்முறை :::


தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்


வெங்காயத்தை தோல் உரித்து கழுவி துளி கூட ஈரம் இல்லாதவாறு காய விடவும்.


காய்ந்ததும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் இரண்டு மூன்று சுற்றுகள் விட்டு எடுக்கவும். அதே போல் பூண்டையும் கொரகொரப்பாக அரைக்கவும். வெந்தயத்தை நல்லெண்ணெயில் வறுத்து பொடிக்கவும்.வெந்தயத்தை வறுத்து,பொடி செய்து சேர்த்தால் மிகவும் மணமாக இருக்கும்.


அரைத்த கலவையுடன் கடுகு,சீரகம்,கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு, மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.


நாள்1:

கலந்தவற்றை மூடி போட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.


நாள்2:

காலையில்,மீண்டும் கலந்துவிட்டு,கைகளால் பிழிந்தால் சாறு வெளியேறும்.பிழிந்தவற்றை வெறும் தட்டில் பரப்பவும்.


சாறை,அப்படியே அதே பாத்திரத்தில் வைத்து மூடி வைக்கவும்.


பிழிந்ததை,சூரிய ஒளியில் காய வைக்கவும்.ஒன்றிரண்டு முறை ஸ்பூன் கொண்டு கிளறி வீட்டுக்கு,மாலையில் எடுத்து வந்து,நாம் மூடி வைத்துள்ள சாறுடன் சேர்க்கவும்.


இதனுடன் நன்கு கழுவி ஈரம் இல்லாத கறிவேப்பிலை 1 கைப்பிடி நறுக்கி சேர்த்து கலந்து விட்டுஅழுத்தி,இரவு முழுதும் ஊற விடவும்.


நாள்3:

காலையில்,சாறு கலவையில் ஊறி இருக்கும்.கைகளால் பிழிந்தால் வராது.வந்தால், நாள் 1ல் செய்த செய்முறையை மீண்டும் செய்யவும். அதாவது,பிழிந்து எஞ்சியதை வெயிலில் காய வைத்து,இரவு மீண்டும் சாறில் ஊற விடவும்.


இனி,பாத்திரத்தில் இருப்பதை வேறு தட்டிற்கு மாற்றி வெயிலில் காய விடவும்.2 முறை கிளறி விடவும்.மலையில் எடுத்து வந்து காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். ஈ, எறும்பு வராமலிருக்க வரமிளகாய் மேலே போடவும்.


மீண்டும் கிளறி விட்டு வெயிலில் காயவிடவும்.

இவ்வாறு நன்கு காயும் வரை செய்யவும்.வெயிலுக்கு ஏற்றாற்போல்,குறைந்தது 7-9 நாட்கள் ஆகும்.


நன்றாக காய்ந்ததும் 2ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு கலந்து விடவும்.பின் வெயிலில் வைத்து காய விடவும்.


வெயில் நன்றாக இருந்தால் 1நாளில் காய்ந்து விடும்.நன்றாக காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் போட்டு வெகு நாட்கள் பயன் படுத்தலாம்.


கார குழம்பு,மீன் குழம்பு போன்றவைகளுக்கு கடைசியாக,1ஸ்பூன் நல்லெண்ணையில்,இந்த வடகம் சிறிதளவு சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்தால் கூடுதல் மணமாக இருக்கும்.


அவ்வளவுதான். மணமான,குழம்பிற்கு சுவை கூட்டும் தாளிப்பு வடகம் ரெடி.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.