வெஜிடபிள் வடை செய்வது எப்படி .?
தேவையானவை:
வெள்ளை உளுத்தம்பருப்பு – கால் கிலோ, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், துருவிய கேரட் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து. தண்ணீரை வடிகட்டி… இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைககளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டும் செய்யலாம்...
கருத்துகள் இல்லை