ஆட்டுக்குடல் வறுவல் செய்வது எப்படி...!!


பொருள்அளவு

ஆட்டுக்குடல் முக்கால் கிலோ 

சின்ன வெங்காயம் கால் கிலோ 

பச்சை மிளகாய் 5

மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன் 

கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் 

தேங்காய் துருவல் ஒரு கப் 

உப்பு தேவைக்கேற்ப 

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - ஒரு டீஸ்பூன் 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

செய்முறை :


 ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டுத் தேய்த்து ஓடும் நீரில் நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


 குக்கரில் ஆட்டுக்குடலுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக வைக்கவும்.


 வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு குடலைத் தனியாக எடுத்து வைக்கவும்.


 கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


 வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த குடலைச் சேர்த்து, மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.


 பிறகு தேங்காய் துருவலை சேர்த்துக் நன்கு கிளறிவிடவும்.


 தீயின் அளவை அதிகரித்து 5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி, ட்ரையானதும் இறக்கவும்.


 சுவையான ஆட்டுக்குடல் வறுவல் தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.