காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு!
எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச நீதிகோரி மாபெரும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும், அனைவரும் ஆதரவு வழங்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை