தபால் மூல வாக்களிப்பு தவறியவர்கள்..11,12 திகதிகளில் வாக்களிக்க ஏற்பாடு

 


தபால் மூல வாக்களிப்பு தவறியவர்கள்..11,12 திகதிகளில் வாக்களிக்க ஏற்பாடு..மாவட்ட செயலாளர் பிரதீபன் தெரிவிப்பு.


யாழ் தேர்தல் தொகுதியில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் தவறியவர்கள் 11 ஆம் திகதி மற்றும் 12திகதிகளில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் பொது மக்களுக்கு வாக்களிப்பதற்கு எவ்வாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதோ அதே போன்று தபால் மூல வாக்களிபுக் கடமைகளில் பங்கேற்கும் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற உள்ளது.


5ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தபால் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 


குறித்த திகதிகளில் தபால் போல வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் தமது தபால் மூல வாக்குகளை வழங்க முடியும். 


தபால் மூல வாக்களிப்பில் பங்குபற்றும் முகவர்களுக்கான அறிவிப்பு கடிதங்கள் உரிய காலப் பகுதியில் அனுப்பி வைப்பதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


ஆகவே நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் நியாயமான தேர்தல் ஒன்றாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.