மருத்துவர் அர்ச்சுனா கைது 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்!📸🎦


மன்னார் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி
நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாவக்கச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதானுக்க விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.



மன்னார் பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் இரவு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.