மன்னாரிலா மகிழ்ச்சியுடன் வைத்தியர் அர்ச்சுனா!!


 மன்னார் நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.

கடந்த 02-08-2024 ஆம் திகதி இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் இரு சரீரப்பிணையில்   செல்ல அனுமதித்தார்.

மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேர்த்தனர்.

பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.