இராணுவப் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து!!
கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று (03) இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும் நிகழ்வில் படையினர் நடத்திய பரசூட் சாகசத்தின் போது இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
வெல்லவாய ஊவா குடுஓயா பயிற்சிப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு பரசூட் தரையிறங்கும் பகுதிக்கு அப்பால் சென்று மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளதுடன், மற்றொறு பரசூட் வேகமாக தரையில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பரசூட் வீரர்களும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை