அமரர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்களின் " குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை" நூல் வெளியீட்டு நிகழ்வு!!
கவிஞரும் எழுத்தாளருமான கம்பிகளின் மொழி பிறேம் அவர்களின் "குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை" என்கிற ஆவணத்தொகுப்பு நூலானது அவரது 41ம் நினைவு நாளான இன்று (15.08.2024 ) அடம்பன் - மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பிகளின் மொழி பிரேம் அவர்களின் துணைவியார் திருமதி.. சுகந்தி பிறேம் அவர்கள் நூலினை வெளியிட்டு வைக்க முதல் பிரதியை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ( கண்ணன் ) பெற்றுக்கொண்டார்.
ணி
இந்நிகழ்வில், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பணியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அவரது உறவுகள் என பலரும் கலந்து கொண்டு
அவருக்கான அஞ்சலியைச் செலுத்தி நூல் வெளியீட்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை