கொழும்பு - காலி வீதி குறித்த அறிவிப்பு!!
சீனிகம ஸ்ரீ மகா தேவோல் தேவாலய ஊர்வலத்தை முன்னிட்டு காலி - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மகா தேவோல் தேவாலயத்தின் வருடாந்த ஊர்வலமானது இன்று (31) முதல் செப்டெம்பர் 03ஆம் திகதி வரை காலி - கொழும்பு பிரதான வீதியில் நடைபெறவுள்ளது.
அதன்படி, 31ஆம் திகதி சனிக்கிழமை - மாலை 01:00 முதல் இரவு 08:00 வரை,
01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை - மாலை 01:00 முதல் இரவு 08:00 வரை,
02ஆம் திகதி திங்கட்கிழமை - மாலை 06.00 மணி முதல் அதிகாலை 03.00 மணி வரை,
03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை - மாலை 06.00 முதல் மறுநாள் அதிகாலை 04.00 வரை காலி - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
இதனால், இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அனைவரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை