யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இரவு உணவு உண்டது தமிழ அரசியல்வாதியின் வீட்டில்!

 


யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இரவு உணவு உண்டது தமிழ அரசியல்வாதியின் வீட்டில்.. யாழில் வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவிப்பு.


யாழ் பொது நூலகத்தை எரித்தவர்கள் இரவு உணவை உண்டது தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் தான் என்பது தமிழ் மக்களுக்கு தெரியுமா? என ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர யாழில்  தெரிவித்தார்.


நேற்று சனிக்கிழமை யாழ் றக்கா வீதியில் இடம் பெற்ற  யாழின் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 


 அவர் மேல தெரிவிக்கையில் யாழில் பொது நூலகத்தை யார் அழித்தவர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரிந்திருந்தாலும் எரித்தவர்கள் இரவு உணவை உண்டது தமிழ்  அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் என்பது அனேகமான தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.