ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு!

 


இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையில் சுமார் 10 மாதங்களுக்கு மேலாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.


இந்தப் போரினால் பலியான பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தைக் கடந்துள்ளன.


இதன் காரணமாக இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பல மாதங்களாக முயற்சித்து வருகின்றன.


இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்துவதற்கான பரிந்துரைகளை அமெரிக்கா தயார் செய்தது.


இப் பரிந்துரைகளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொள்ளும் விதமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் (Antony Blinken) கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்தார்.


முதலில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து எகிப்து, கட்டார் நாட்டு அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.


ஆனால், ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படாமல் உள்ளது.


போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் 9ஆவது முறையாக பயணம் மேற்கொண்ட ஆண்டனி பிளிங்கனின் பயணம் இம்முறையும் வெற்றி பெறவில்லை.


நாங்கள் ஏற்றுக்கொண்ட முந்தையை பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளன. இஸ்ரேல் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்குகிறது என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.


ஹமாஸின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எதுவித பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.