எனது உயிருக்கு உத்தரவாதமில்லை !!
யாழ். போதனா வைத்தியசாலையில் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக நபர் ஒருவர் தெரிவித்த கருத்து கீழே தரப்பட்டுள்ளது.
எனக்கு என்னவும் நடக்கலாம். ஆனால் நடந்ததை மறைக்க முடியாது.
என்னால் முடித்த வரை நடவடிக்கைக்காக உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்து விட்டேன்.
இங்கே நீதி கிடைக்குமா, இல்லையா என்பதற்கு அப்பால் அதிகார வர்கத்தின் கோர முகங்களை வெளிப்படுத்தி உள்ளேன்.
அச்சுறுத்தல், அடி பணிய வைத்தல், பேரம் பேசுதல் என பலதரப்பட்ட நிலைகளை கடந்து தான் என்னுடைய கடமையை செய்தேன்.
விசாரணை குழு வந்தால் முழுமையாக ஒத்துழைப்பேன். அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு முழுமையாக ஆதரங்களை முழு Source உடன் கொடுப்பேன்.
நான் மருத்துவ துறையை முழுமையாக குற்றம் கூறவில்லை. மருத்துவ துறையை நான் பெரிதும் மதிக்கிறேன்.
ஒட்டுமொத்த வைத்தியர்களையும் நான் குற்றம் கூறவில்லை. வைத்தியர் மேல் எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.
இனித்தான் மிகப்பெரிய ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம்.
எனக்கு எந்த சூழ்நிலை வந்தாலும் இங்கே வேடிக்கை பார்க்கும் ஒரு சிலர் கவலைப்பட மாட்டார்கள் என்பதையும் நன்கு அறிவேன்.
ஆனால் நீதியின் பக்கம் நிற்கும் பலரையும் இந்த உலகம் எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆயிரம் (1000) நபர்கள் அநீதிக்கு துணை நின்றாலும் நியாயத்தின் பக்கம் சமரசம் இன்றி நிற்பவர்களும் உள்ளனர்.
எந்த பிரச்சினை என்றாலும் சமாளிக்க முடியும். சமூகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ள மருத்துவ துறையின் சிலர் உடையை அச்சுறுத்தல் என்பது உள ரீதியாக பாரிய பின்னடைவை கொடுத்தாலும் நான் வளர்ந்த மற்றும் என்னை வளர்த்த சூழல் தான் இன்று வரை எனக்கு அளவற்ற ஓர் முரட்டு தையிரித்தை கொடுப்பதால் தான் தற்போது வரை நின்று பிடிக்கிறேன்.
என்னும் தொடரும் மோசமான சூழ் நிலையில் எனது எழுத்துகள் முடக்கப்பட்டாலும் நான் எழுதியவற்றை என்றும் வரலாறு கூறும்.
ஆனாலும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மனித உரிமைகள் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் சுயாதீன எழுத்து போன்றவற்றை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு உள்ளேன்.
இன்றோ, நாளையோ எனக்கு என்ன நடந்தாலும் நீங்களும் தட்டி கேளுங்கள், கேட்க வேண்டும் என உங்களிடம் அன்பாக வேண்டுகின்றேன்.
"நன்றி"
த. கிருஷ்ணா
மனித உரிமைகள் பாதுகாவலர் & செயற்பாட்டாளர்
Human Rights Defender & Activist
12.08.2024
@highlight
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை