மக்களிடம் மன்னிப்பு கோரும் அமைச்சர் அலிசப்ரி!


 இலங்கையில் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெரும்பாலானோர் நேற்று இரவை அதே இடத்தில் கழித்தனர்.

பல நாட்களாக இப்படியே தங்கி இருக்கும் மக்களுக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு வரிசை உருவானது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரை நீடிப்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு இன்று காலை அதிகமானோர் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .

www.youtube.com/@TamilArul-786 subscribet by my chanel

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.