மோசடி செய்த ஆசிரியருக்கு நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு!!
6 காசோலைகளை வழங்கி மோசடி செய்த ஆசிரியை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2010 ஆம் ஆண்டு 6 காசோலைகளை வழங்கிய மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பெண் ஆசிரியை ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.
வழக்கு தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பில் , குற்றவாளியாக இனம் காணப்பட்ட பெண் ஆசிரியரின் அரசாங்க தொழிலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கட்டாய சிறை தண்டனையை தவிர்த்து, அரச செலவாக 50 ஆயிரம் ரூபாவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 37 இலட்சம் ரூபாவும் செலுத்துமாரும் நீதிபதி இளஞ் செழியன் உத்தரவிட்டார்.
அதோடு குறித்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நேற்று (7) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேவேளை பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 2006 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டமை மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அரச சட்டவழக்கஞர் ஆறுமுகம் தனுசன் வழக்கு தொடுத்தவர் தரப்பில் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார். பெண் ஆசிரியர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 இலட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றில் வைத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் 3 மாத காலத்தில் மீதி தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பணம் செலுத்த தவறினால் உடனடியாக சிறைத்தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் 14 ஆண்டுகள் ஏமாற்றியது போதும் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், இனியும் பணம் செலுத்தாது ஏமாற்ற முடியாது என தெரிவித்து குற்றவாளியாக இனம் காணப்பட்ட ஆசிரியைக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை