இளம் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

 


இலங்கையில் உள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு சென்ற பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (01-08-2024) இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த பிரித்தானிய பெண், சுற்றுலா பொலிஸார் மற்றும் ஒரு குழுவினரின் உதவியுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எல்ல - பசறை வீதியில் அமைந்துள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு தரிசிப்பதற்காக நேற்று பயணித்த 33 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரே இவ்வாறு மலையில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் அவரது வலது கால் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.