பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்!

 


புதிய அரசாங்கத்தில் பிரதமராக திருமதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாகவும், அமைச்சர்களாக விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமாரதிஸாநாயக்க நேற்றையதினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று(24) இடம்பெறலாம் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணரச்சியின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்தது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.