காளான் பெப்பர் மசாலா செய்வது எப்படி ?
தேவையானவை:
காளான் - 200 கிராம்
ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் செதில் (சில்லி ஃப்ளேக்ஸ்) - அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை, சோம்புத்தூள், நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், காளான், குடமிளகாய், மிளகுத்தூள், மிளகாய் செதில் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் சிறுதீயில் எண்ணெயிலேயே வறுத்து எடுக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித்தழை தூவவும்....
கருத்துகள் இல்லை