மனு பாக்கர் துப்பாக்கியின் விலை ஒரு கோடியா?
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர் தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். எங்கு சென்றாலும் 2 பதக்கங்களையும் எடுத்துச் சென்று காட்டிக் கொண்டிருப்பதாக அவர் மீது சிலர் குறை கூறி வந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மனு பாக்கர், தான் வென்ற 2 பதக்கங்களும் இந்தியாவுக்கானது. இதை எங்கு சென்று காட்டச் சொன்னாலும் அதை பெருமையோடு காட்டுவேன். என்னுடைய வெற்றியை பகிர்ந்து கொள்ள அழகான வழி இதுதான் என்று பதிலடி கொடுத்தார். இதற்கிடையே, மனு பாக்கர் பயன்படுத்தி வெண்கலம் வென்ற துப்பாக்கியின் விலை ஒரு கோடி என்றும் வதந்தியை பரப்பி விட்டனர்.
இது குறித்து மனுப்பாக்கரிடத்தில் ஸ்போர்ட்ஸ் நெக்ஸ் யூடியூப் சேனலில் கேள்வி கேட்கப்பட்ட போது, என்னது ஒரு கோடியா? என்று வாய் விட்டு சிரித்தார்.
பின்னர், தான் பயன்படுத்தும் துப்பாக்கியின் மாடலை பொறுத்து 1.50 லட்சம் முதல் 1.85 லட்சம் வரை விலை வரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நீங்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகளை குவிக்க தொடங்கி விட்டால், பல நிறுவனங்கள் உங்களுக்கு துப்பாக்கியை ஸ்பான்சர் செய்ய முன் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரு வெண்கலப்பதக்கங்களை வென்றிருந்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக இரு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு பிறகு, அவரின் விளம்பர கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவரை விளம்பரத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளன.
–எம்.குமரேசன்
#Tamilarul.net #Tamil #News #TamilNews #TamilDailyNews #Website #TamilnaduNews #News_Paper #Tamil_Nadu_Newspaper #Online #BreakingNews2024 #NewsHeadlines #LatestUpdates #tamilcinema #indian #WorldNews #TamilFilm #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu ##Batticaloa #kandy #SriLanka #colombo
கருத்துகள் இல்லை