எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி..?


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

எலுமிச்சம் பழம்10

கல் உப்புதேவைக்கேற்ப

மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்

மிளகாய் வற்றல்8

பெருங்காயத்தூள்கால் டீஸ்பூன்

தாளிக்க 

நல்லெண்ணெய் - கால் லிட்டர்

கடுகு - அரை டீஸ்பூன்

செய்முறை :


  எலுமிச்சம் பழத்தை மட்டும் எடுத்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


  சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் நறுக்கிய எலுமிச்சைகளைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.


  இப்படி கலந்த பின்பு, அதை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு வைக்கவும்.


  பாட்டிலில் அடைக்கப்பட்ட எலுமிச்சைத் துண்டுகளைத் தினமும் இரண்டுமுறை ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.


  சுமார் ஐந்து நாட்கள் எலுமிச்சைத் துண்டுகள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும்.


  பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும்.


  வறுத்த மிளகாய் வற்றலை ஆறியதற்குப் பிறகு, அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும். மிளகாய் மொறுமொறுப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.


  அரைத்த மிளகாய்த்தூளை ஊறுகாயில் கலக்கவும். 


  ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணையை ஊற்றிச் சூடு செய்து கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். 


  கடுகு வெடித்ததும், கலக்கி வைத்துள்ள ஊறுகாயைச் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.


  சூடு ஆறிய பின்பு, சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றி விடவும்.


  ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலே சிறிது நிற்கும்படியாக இருக்க வேண்டும்.


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த எலுமிச்சம் ஊறுகாயை மோர் சாதம், கம்மங்கூழ், தயிh; சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தக்காளி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.