ஷங்கர், வெற்றிமாறனுடன் மோதும் நடிகர் விக்ரம்
இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் வெற்றிமாறன் படங்கள் வெளியாகும் திகதியில் விக்ரம் நடித்த படம் வெளியாக இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “வீர தீர சூரன்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அதே தேதியில் ஷங்கர் இயக்கியுள்ள “கேம் சேஞ்சர்” மற்றும் வெற்றிமாறன் இயக்கியுள்ள “விடுதலை 2” போன்ற படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு பெரிய படங்களுடன் விக்ரம் படமும் மோத இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை உள்பட பல இடங்களில் நடந்து வந்த நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை