நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு!
வவுனியா நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அந்த வகையில் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவாநந்தன் ஜெனிற்றா, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார், சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, மற்றும் சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை