தன்னிச்சையாக முடிவெடுக்க சுமந்திரன் யார் என கேள்வி!


கட்சித் தலைவருக்குத் தெரியாமல் முடிவெடுக்கும் நிலையில்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருக்கின்றமை மிக வேதனையானது. 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசுக் கட்சியின் திருகோணமலைக் கிளை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆனால், அந்த மாவட்டத்திலுள்ள இளைஞர்களினதும் நாடாளுமன்ற உறுப்பினரினதும் தீர்மானத்தை திரு.சுமந்திரன் அவர்களின் தலைமையிலான சிலர் உதறித்தள்ளியிருக்கின்றனர். 


தமிழர் தலைநகரில் உள்ள நிலமைகைளை அங்குள்ள மக்களுக்கும் இளைஞர்களுக்குமே தெரியும். அந்த நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்றவோ, பறிபோகும் நிலத்தை மீட்டெடுக்கவோ முயற்சி எடுக்காத திரு.சுமந்திரன் தலைமை அந்த மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உதறித்தள்ளியிருக்கின்றது. இது எதிர்காலத்தில் திருகோணமலை முற்றுமுழுதாக பறிபோகவே வழிவகுக்கும். 


ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் போன்று சுமந்திரன் அவர்களும் தமிழரசுக் கட்சியை பல கூறாகப் பிளவடையச் செய்திருக்கின்றார். இதை தமிழரசுக் கட்சித் தலைவரும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக விரைவில் ஒரு முடிவெடுப்பார்கள் எனத் தெரியவருகின்றது. 


இதேவேளை. தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் எனக் கூறுவதற்கு சுமந்திரன் யார் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.