மாதகலில் படகு நீரில் மூழ்கி விபத்து!
யாழ்ப்பாணம் மாதகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் பயணித்த படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (04.09.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு இளைஞர்கள் இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை, அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.
அவரை தேடும் நடவடிக்கைகளை கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை