பீட்ரூட் ரைஸ் செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2
சாதம் (வேக வைத்தது) – தே.அளவு
பச்சை பட்டாணி – சிறிதளவு
முந்திரி – 5-6
மஞ்சள் தூள் – 1\2 தே .கரண்டி
மிளகாய் தூள் – 1\2 தே.கரண்டி
உப்பு – தே.அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
தாளிக்க:
ந.எண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – 1\4 தே.கரண்டி
சீரகம் – 1\4 தே.கரண்டி
வத்தல் – கார தேவைக்கு
கடலை பருப்பு -சிறிதளவு
கருவேப்பிலை -சிறிதளவு
செய்முறை:
1)ஒரு வாணலியில் 2 தே.கரண்டி ந.எண்ணெய் விட்டு கடுகு ,சீரகம் ,வத்தல் ,கருவேப்பலை ,காய்ந்த வத்தல் சேர்த்து கருக விடாமல் நன்கு வதக்கவும்
(டிப்ஸ் : தாளிக்கும் பொது அடுப்பை சிம்மிலே வைக்கவும்)
2)பின்பு அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத் தூள்,மசாலா தூள், மஞ்சள் தூள் தே.அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
3)நன்கு வதங்கியதும் அதனுடன் பச்சை பட்டாணி,துருவிய பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
(டிப்ஸ்:பச்சை பட்டாணிக்கு பதிலாக நாம் வேறு காய்கறிகளும் சேர்த்து கொள்ளலாம்)
4)கொஞ்சம் வதங்கியவுடன் நாம் முன்னரே எடுத்து வைத்திருக்கும் வேக வைத்த சாதத்தினை சேர்த்து நன்கு கிளறவும்
5)சிறிது நேரம் மூடி போட்டு அடுப்பிலே வைத்து பின்னர் இறக்கி பரிமாறவும்
சுவையான சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரைஸ் தயார்.
கருத்துகள் இல்லை