பாடசாலைகளுக்கு விடுமுறை 20ம் திகதி!


 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதற்கிடையில், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களாக பயன்படுத்தப்படும் பல பாடசாலைகள் செப்டம்பர் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும்.


செப்டம்பர் 19ம் திகதி பாடசாலை நேரம் முடிந்ததும் வாக்கு எண்ணும் மையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் கிராம நிர்வாக அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.