21/09/24 சனிக்கிழமை மஹா பரணி சிறப்பு! !


"மஹாபரணி” என்பது புரட்டாசி மாதத்தில் அல்லது அதற்கு முன் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நக்ஷத்திரமாகும் !


பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரம் ஆகும். . .!


இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம விணைக்க ஏற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க..


சொர்க்கத்திற்க்கும் நரகத்திற்க்கும் செல்வார்கள் என்பது நியதி ஆகும் !


யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நக்ஷத்திர நாளில் முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம், திதிகள் செய்வது யம தீபம் ஏற்றுவது நம் மரபு !


மரண பயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும் !


தக்ஷிணாயன புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பக்ஷம் ..


தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்பணம் செய்வது சிறப்பு !


அவ்வாறு வருகை தரும் பித்ருகளுக்கு. அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது...

“யம தீபம்” மட்டுமே. . !


அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வழக்கம...!


சாஸ்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்...!

தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்...!

விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் ...

உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் நினைக்க வேண்டும் ..!

பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்..!


"ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச..


வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச..


ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே !


வ்ருகோதராய சித்ராய 

சித்ரகுப்தாய வை நம.

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி..!!"


யம தீபம் ஏற்றி..ஆலய வழிபாடு செய்ய ஏற்ற ஆலயங்கள் ..


1.     மயிலாடுதுறை அருகில் 

ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி..

2.     தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி...

3.     திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில்...

4.     அனைத்து சனி பரிகார 

ஸ்தலங்களில்...

5.     அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளில்..

6.      யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்..

7.      ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டியது நிறைவேற தீபம் ஏற்றுவதற்கென்றே ஒரு தீப தூண் உள்ளது ..!

அதிலே நம் பித்துருக்கள் தோஷம் நீங்கி அவர்கள் ஆசி வேண்டி தீபம் போடலாம் !


அல்லது..

மாலை வேலையில் அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றி வழிபடலாம் !!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.