புதிய சனாதிபதி அநுரவுக்கு எதிர்காலம் சவாலானதே!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதிக்கு வளிவிட்டு தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
ரணில் விக்கிரமசிங்க சிறந்த இராஜதந்திரி அவரிடம் இருக்கும் அரசியல் அறிவும் அணுகுமுறையும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவிடம் இல்லாது போனாலும் மக்கள் ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளாத சந்தர்ப்பத்தில் அநுர ஆட்சியை பொறுப்பெடுத்துள்ளார்.
IMF கடன் நிபந்தனையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அநுர தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதில் உள்ள சவால் என்னவெனில் முன்னாள் ஜனாதிபதி IMF இடம் கடன் பெறுவதற்கான திட்ட வரைபுகளை தானகவே தயார் செய்து சுமார் 8 மாதங்கள் கடந்தே ரணில் விக்கிரமசிங்க நிதியைப் பெற்றார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர பதவி ஏற்றதன் பின் பல்வேறு சவால்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்படும் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை நாட்டை நடாத்திச் செல்லும் பொறுப்பு சவாலானது.
ஊழல் அல்லாத நபர்களை அமைச்சரவையில் நியமிக்க வேண்டும்.
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பெரும்பான்மை பலத்துடனான ஆட்சியை அமைக்க வேண்டும் .
சீனா விசுவாசம் இந்திய அமெரிக்க இராஜதந்திர போட்டித் தன்மையை சமப்படுத்தல்
ரணில் விக்கிரமசிங்கவை வெளியில் வைத்துவிட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதும் சவாலான விடையம் .
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரணில் ராஜபக்ச கூட்டு கைப்பற்றப்போகும் பாராளுமன்ற ஆசனங்கள் பதவி ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி அநுரவுக்கு எதிர்காலம் சவாலானதே!
ஆட்சி அதிகாரங்களை தந்திரமாகவும் நட்பு நாடுகளுடனா இராஜதந்திர உறவுகளை தந்திரமாக பயன்படுத்த தவறின் ரணில் என்கின்ற இராஜதந்திரியின் மீள் வருகை எதிர்பார்த்த ஒன்றாக அமைந்துவிடும்.
கருத்துகள் இல்லை