செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார்?–சீமான் கேள்வி!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “செந்தில் பாலாஜி தியாகம் செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். டாஸ்மாக் சரக்கை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்வது, லஞ்சம் பெறுவது தான் தியாகமா?
செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவர் ஊழல் செய்ததாக கரூரில் ஸ்டாலின் பேசினார். ஆனால், இப்போது திமுகவுக்கு வந்ததும் நல்லவராகிவிட்டார்.செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதில் எந்த தடையும் இல்லை என்கிறார்கள். யார் அதிகமாக கப்பம் வசூலித்துக் கொடுக்கிறார்களோ அவர்களை தான் இந்த ஆட்சியில் அமைச்சர் ஆக்குவார்கள்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை