யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!


யாழ் பலாலி சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மற்றுமொரு இளைஞர் படுகாயடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று பலாலி சந்தியில் மின் கம்பத்துடன் மோதி இந்த கோர விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.


சம்பவத்தில் யாழ் பலாலி பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் அபி வயது 18 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர்.


சடலம் யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் உடற்கூற்று சோதனைக்காக வைககப்பட்டுள்ளது, 


யாழ்ப்பாணம் - பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.