5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்!
இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கீழ் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜாரட்னம் ஆகியோர் இன்றையதினம் (27-09-2024) தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதேவேளை, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திரவும், மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோனும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.இதனையடுத்து, ஊழலற்ற வகையில் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
ஆளுநராகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே நாகலிங்கம் வேதநாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #TamilNews #TamilDailyNews #Website #TamilnaduNews #News_Paper #Tamil_Nadu_Newspaper #Online #BreakingNews2024 #NewsHeadlines #LatestUpdates #tamilcinema #indian #WorldNews #TamilFilm #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu ##Batticaloa #kandy #SriLanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை