அனுரவின் ஆட்சி காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காது!

 


ஒன்றிணைந்த தேசத்திலே, ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் தொடர்பில் 

தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் UPFA கட்சியுடன் கூட்டு வைத்த ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான Ceasefire  ஒப்பந்தத்தை எதிரித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றிபெற்றது,  சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க அதிபரானார். கூட்டணியில் இருந்த ஜேவிபி யை சேர்ந்த அனுர திசநாயகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழிந்து திசநாயாக அந்த பதவியை ராஜினாமா செய்தார்.


தேசிய மக்கள்சக்தியின் பிரச்சார அறிக்கையில்....

தமிழர்களுக்கு....


அனுரவின் ஆட்சி காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காது!

இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.

ஒரு NPP அரசாங்கம் நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் அதே வேளையில் அரசியலமைப்பின் 9 வது சரத்தை பாதுகாத்து நிலைநிறுத்தும் என்று கூறிய அவர், அதற்காக ஜே.வி.பி பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து செய்வதாகவும், NPP பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உறுதியளித்தார்.

13வது திருத்தத்தை தற்போதைய வடிவில் மட்டுமே அமுல்படுத்துவோம் எனவும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை NPP வழங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் தேசிய பிரச்சினை அல்லது மாகாண அபிவிருத்திக்கான தீர்வு அல்ல என்ற கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.