அநுர அலைக்கு அணைபோட குவியும் கூட்டணிகள்!
🛑 அநுர அலைக்கு அணைபோட எதிரணிகள் வியூகம் வகுப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் பேச்சுகள் முன்னெடுப்பு. பச்சைக்கொடி காட்டுவதில் சஜித் அணி சற்று இழுத்தடிப்பு.
🛑 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பிக்கள், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டணி அமைப்பதற்குரிய நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பில் நாளை இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.
🛑 நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.
🛑 பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பலமான அணியை களமிறக்கவுள்ள தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவு ஏற்பட்ட மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
🛑 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுத்தேர்தலில் களமிறங்காமல் இருப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் சிலர் செயற்பாட்டு அரசியலுக்கு விடைகொடுக்கவுள்ளனர்.
🛑 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலும் பொது கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் மந்திராலோசனை நடத்தப்பட்டுவருகின்றது.
🛑 களுத்துறை மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகள் உள்ளன. தமிழ் மக்களும் வாழ்கின்றனர். முஸ்லிம் சகோதரர்களும் உள்ளனர். களுத்துறை மாவட்டத்துக்கு இம்முறை ஆசனமொன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, களுத்துறை மாவட்டத்திலிருந்து தமிழ் பேசும் பிரதிநிதியொருவரை சபைக்கு தெரிவுசெய்வதற்குரிய வாய்ப்பு உதயமாகியுள்ளது.
🛑 கொழும்பு, கண்டி மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பது தொடர்பிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டுவருகின்றது.
🛑 அரசியல் களத்தில் மீண்டும் கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த முன்னாள் எம்.பி., திலும் அமுனுகம, மௌபிம ஜனதாக் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித்துடன் சங்கமித்துள்ளனர். அடுத்துவரும் நாட்களிலும் தாவல்கள் இடம்பெறவுள்ளன.
ஆர்.சனத்
raasanath@gmail.com
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை