பெண்கள் குழந்தைகள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்!!




யாழ்ப்பாணத்தில்  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில்  நேற்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

 தாக்குதல் சம்பவம் அடுத்து  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

அறுவர் கொண்ட கும்பல் வன்முறைக்காக வந்து, இருவர் வெளியே நின்ற நிலையில் நால்வர் கொண்ட கும்பல் உள்ளே வந்து எனது 5 வயது மகளின் வயிற்றில் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

எனது சகோதரி பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடாத்தியதுடன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிக்கப்பட்ட எனது சகோதரன் மீதும் தாக்குதல் நடாத்தினர்

எனது மகனான சிறுவனது தொண்டையை பிடித்து திருகியதோடு  அட்டகாசம் செய்ததுடன் வேலியின் தகரம் மற்றும் கதிரை என்பவற்றை உடைத்தனர்.

சம்பவத்தில்  பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான எனது சகோதரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.