யாழில் பெண் வைத்தியரால் ஏற்படும் அசௌகரியம்!!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணராக கடமையாற்றும்  அஜந்தா கேசவராஜ் கடந்த 6 நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இதேவேளை, வைத்திய நிபுணர் அஜந்தா சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த 18.09.2024 திகதி அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளைப் பார்வையிடவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குறித்த வைத்திய நிபுணர் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

வைத்திய நிபுணர் அஜந்தா தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல், மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாக உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.