யாழ். விமான நிலையத்தில் மாற்றம்!!
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (2) மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சார வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் இந்த கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர், விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் சந்தைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

.jpeg
)





கருத்துகள் இல்லை