பூமியைச் சுற்றவுள்ள புதுநிலவு!!

 


இந்த ஆண்டில் (2024) பூமிக்கு தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 

கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.

இந்த சிறு கோள் ஆனது எதிர்வரும் செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini- செயல்பட உள்ளது. 

இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறுகோள் பூமியை சுற்றவுள்ளது. 

எனினும், ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.