குடிகாரன் குடிகெடுப்பான்!.
குடிகாரன் குடிகெடுப்பான்!.
***********-*****************
மனையுண்டு
மனையாளுண்டு,
மாதவமாய்ப் பெற்ற தன்
மக்களுண்டென்ற
மனச்சிந்தையே இல்லாமல்,
வளவுண்டு
வளவாழ்வுண்டு
வாழ்க்கையை ஓட்ட
வலுவுண்டென்ற
வக்கணைகூட இல்லாமல்
குடிப்பதொன்றையே தங்கள்
கொள்கையாய்க் கொண்ட
குடிகார த(ம)ந்தையரால்தான்
குடும்பக் கோயில்கள் பலவும்
குடைசாய்ந்துபோகிறது சமூகத்தில்!.
கடிவாளமில்லாக் குடிகாரன்
குடும்பத்தைக் குற்றுயிராக்கி
காடுமேடு அலையவிட்டுக்
கோவணத்தோடு தானுமலைந்து
கேடுகெட்டுப் போகுவான்!- அந்தச்
சதிகாரன் தனது
வம்ச விருட்சத்தையே
வேரோடு அறுத்துப்போட்டு
சங்கடமேதுமின்றி
சாந்தகுருபோல சாந்தியாயிருப்பான்!.
நம்பிய தன்
நாயகியையும்
நடுத்தெருவுக்கு இழுப்பான்! -அட
நன்மை தீமை அறியாத
மக்களையும் மாடுகளாய் வெழுப்பான்!.
இருப்பதையும்
இழுத்தெடுத்துத் தன்
இல்லிடத்தையும் இடித்தெரித்து
இரக்கமில்லா இரணியரிடம்
இல்லாளையும் அடகுவைப்பான்!.
வன்னியூர்- வரன்
01/09/2024
கருத்துகள் இல்லை