யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்களாக கடமையாற்றிய இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
வணிகவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் என்பவர் வணிகவியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் இலத்திரனியலில் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்களின் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.
கருத்துகள் இல்லை