அவசரமாக அகற்றப்பட்ட ரணிலின் பதாதைகள்!!
வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் இன்று (01) அகற்றப்பட்டுள்ளது .
வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்துள்ளது .
குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகை தருவதற்கு முன்பு பொலிஸாரால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இச் சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரை அழைத்தபொலிஸார் அவர்களின் விவரங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை