ஓட்டு போடுவோம்!!



என்னிடம் இருக்கிறது

இன்னமும் மை தடவாத பத்து விரல்!


என் விரல்களை 

நீட்டி வைத்தபடி நிற்கிறேன்.

எல்லோரும் வரிசையில் வாருங்கள்


மைதடவி 

உங்கள் காகிதங்களில் ஒற்றி எடுத்துச் செல்லுங்கள்.


எனக்கெனத் தெரிவுகள் எவையும்

இப்போதைக்கு இல்லை.

அது 

எப்போதும் கூட இல்லாமல்  இருக்கலாம்.


முந்துகிறவனுக்கு முதல் விரல்

அடுத்தவனுக்கு ஆட்காட்டி

மூன்றாமவனுக்கு நடு விரல்.

விரைந்து வந்து என் படலையில் நில்லுங்கள்.


செல்லுபடியானதை செல்லாதென ஒதுக்குங்கள்.

செல்லாததை செல்லும் என எழுதிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கென்ன 

ஒரு விரல் தானே வேணும்.

என்னிடம் இருக்கிறது

இன்னும் மை தடவாத பத்து விரல்.


உங்களில் ஒருவன்

என் ஒற்றை விரலால்

நிராகரிக்கப்பட்டிருந்தாலோ 

அல்லது 

அங்கீகரிக்கப்பட்டிருந்தாலோ

அந்த இரத்தம் என்மேல் சிதறாதிருக்கட்டும்.


நீங்கள் தடவிப் போகும்

அந்த கருநீல மை போதும்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு

என் விரல் துடைத்த கண்ணீர்களை 

வெளியே யாருக்கும் தெரியாது மறைக்க.


ஒரு மைக்குடுவையோடு வாருங்கள்

இன மனங்களுள்ளும்

மத மனங்களுள்ளும்

நீங்கள் கட்டியெழுப்பிய கழிப்பறைக்குள் 

என் விரல்களோடு 

நான் காத்திருக்கின்றேன்.



- சாம் பிரதீபன் -


 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.