உலகத்தமிழர்களே உங்கள் திலீபன் பேசுகின்றேன்.!

   


உலகத்தமிழர்களே உங்கள் திலீபன் பேசுகின்றேன்.!

உங்களுக்காய் உயிர் தந்த உங்கள் திலீபன் பேசுகின்றேன்.!

ஈழ விடுதலைக்காக வித்தான ஈகப்போராளி பேசுகின்றேன் !

தலைவனின் அன்புத்தம்பி புதுத்தலைமுறையிடம் பேசுகின்றேன்.!

என் அகிம்சைப்போர் ஆண்டுகள் முற்பது ஆகியும்

இன்னும் என் வயிற்றின் பசி தீரவில்லை ?

ஏன் நீங்கள் என் பசி தீர்க்கவில்லை.?


விட்டுப்பிரிந்த ஊரும் தட்டிப்பறித்த உரிமையும்

திருப்பிக்கிடைக்கும் வரைக்கும் திலீபன் நான்

பசியோடு தான் இருப்பேன்

கொலைஞர்கள் பிடித்த உறவும் எம் இளைஞர்கள் பலரும்

வீடு திரும்பும் வரைக்கும் திலீபன் நான் பசியோடுதான் இருப்பேன் !

தமிழர் கண்ணீர் நிற்கும் வரைக்கும் !

தமிழர் உரிமை கிடைக்கும் வரைக்கும் !

தமிழர் சுதந்திரம் விடியும் வரைக்கும்!


மாவீரர் கனவுகள் நனவாகும் வரைக்கும் !

தமிழீழ நாடு மலரும் வரைக்கும் !

திலீபன் நான் பசியோடுதான் இருப்பேன்!

தமிழர் எல்லாம் விழிக்கும் வரைக்கும்

அடிமை விலங்கை உடைக்கும் வரைக்கும்

ஆண்ட மண்ணை அனுபவிக்கும்வரை

அண்ணன் எம் தேசம் ஆளும் வரைக்கும்

ஈழ திலீபன் நான் பசியோடுதான் இருப்பேன்


எப்போது தான் என் இரப்பையை நிரப்பப் போகிறாய் தமிழா ?

இன்னும் நான் எத்தனை ஆண்டுகள் பட்டினி கிடப்பது

விரைந்தெனது தூபிவந்து வீர சபதம் எடுத்திடு தமிழா

புது வீச்சு கொண்டிடு தமிழா காத்திருப்பேன் நான் பசியுடன்

காத்திருப்பேன் உங்களுக்காக !

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.