யாழ் தேர்தலில் இனி யார் வெளியேற்றப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்?

 


யாழ்
தேர்தல் தொகுதியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

பெயரை குறிப்பிட்டால் தற்போது சுவாரசியம் குறைந்து விடும் இறுதி வரை வாசியுங்கள் யார் என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
 
 
யாழ் தேர்தல் தொகுதியில் 07 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 10 பேர் போட்டியிட்ட நிலையில் இவ்வரிடம் 2024 ஆம் ஆண்டு 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 09 பேர் போட்டியிட முடியும்
கடந்த தடவை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 1 இலட்சத்து 12 ஆயிரத்து 967 பெற்றுக்கொண்ட ஆசனங்கள் மூன்று.
 
சிவஞானம் சிறிதரன் 35, 884 வாக்குகள், ஆபிரகாம் சுமந்திரன் 27 ஆயிரத்து 834 வாக்குகள், தர்மலிங்கம் சித்தார்த்தன் 23 ஆயிரத்து 840 வாக்குகள்.
அதே தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் உடைய மனைவி சசிகலா ரவிராஜ் சுமார் 100 வாக்கு வித்தியாசத்தில் சித்தார்த்தனிடம் தோல்வி கண்டார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களா தெரிவு செய்யப்பட்ட நிலையில். 
 
புதிதாக தேர்தல் களம் கண்ட தமிழ் மக்கள் கூட்டணி விக்னேஸ்வரன் 21ஆயிரத்து 554 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றினார்.
2004 பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி 55 ஆயிரத்து 303 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் தேசிய நீதியில் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டனர். 
 
 
டக்ளாஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்ற நிலையில் அவரது கட்சியை 45 ஆயிரத்து 797 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியது. 
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வரலாற்றில் முதல் முறையாக யாழ் தேர்தல் தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளையும் உடுப்பிட்டித் தேர்தல் தொகுதியையும் முழுமையாகக் கைப்பற்றிய அங்கயன் இராமநாதன் 49 ஆயிரத்து 373 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டார்.
 
 
மொத்தத்தில் யாழ் தேர்தல் தொகுதியில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதிய முகங்கள் பலர் களம் இறக்கப்படவுள்ள நிலையில் அதில் கடந்த முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி மணிவண்ணன் 22 ஆயிரத்து ஆயிரத்து 741 வாக்குகளை பெற்றுக் கொடுத்தார். 
 
இம்முறை மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து வந்துள்ளார்.
சிலர் விதண்டாவாதமாக கேட்கக்கூடும் மணிவண்ணன் சென்றால் என்ன புதிதாக எங்களுடன் பலர் இணைந்து கொண்டிருக்கின்றனர் எவ்வாறு பின்னடைவை சந்திக்கும் என கேட்கலாம். 
 
அறிந்தளவில் மணிவண்ணனுக்கு அடுத்ததாக சட்டத்தரணி சுகாஸ் 21 ஆயிரத்து 468 விருப்பு வாக்குகளை பெற்றவர்.
இவர்கள் இருவரை விட பின்னால் வந்தவர்கள் எல்லோரும் 4ஆயிரத்துக்கு குறைவான வாக்குகளை பெற்ற நிலையில் நிச்சயம் சட்டத்தரணி மணிவண்ணனின் விலகல் குறித்த கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
அதைத்தவிர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை இம்முறை தேர்தலில் பெற முடியாது. 
 
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இம்முறை கிளிநொச்சி மற்றும் வன்னித் தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் கரையோர மக்களின் ஆதரவு கணிசமான அளவு கிடைக்கப்பெற்றால் மூன்று ஆசனங்களை கைப்பற்ற முடியும். 
 
அதேநேரம் ஜேவிபி யாழ் தேர்தலில் தொகுதியில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை ஜனாதிபதி தேர்தலில் பெற்ற நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தால் கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் அடிப்படையில் சம அளவு வாக்கை விருப்பு வாக்காக ஒரு கட்சி வேட்பாளர் பெறாத இடத்து ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
 
மொத்தத்தில் பார்க்க போனால் கடந்த பாராளுமன்றத்தில் யாழ் தேர்தல் தொகுதியில் 07 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இம்முறை இம்முறை 06 பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றம் செல்ல முடியும்.
 
 
கடந்த தடவை பாராளுமன்றம் சென்ற இருவர் இம்முறை பாராளுமன்றம் செல்ல முடியாத சூழல் உருவாகும்
குறிப்பாக 23 ஆயிரம் விருப்பு வாக்குகளுக்கு மேல் பெறுவர்கள் நம்பிக்கையில் இருக்க முடியும் பாராளுமன்றம் செல்ல .
 
அதே சமயம் ஜேவிபி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குகளை வழங்கினாலும் மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் அந்தளவு தூரம் வாக்குகளை வழங்க மாட்டார்கள். 
 
தேர்தலில் எதுவும் நடக்கலாம் ஜேவிபி யாழ் தேர்தல் தொகுதியில் ஒரு ஆசனத்தை பெறுவார்கள் ஆயின் கடந்த தடவை பாராளுமன்றம் சென்ற மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோற்கடிக்கப்படுவார்.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அது கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் இம்முறை தேர்தலில் நேடியாகப் போட்டியிடாமல் கட்சிக்கு கிடைக்கும் போனஸ் ஆசனத்தில் பாராளுமன்றம் செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகிறது. 
 
 
ஒருவேளை தான் தோற்கடிக்க படலாம் என்ற அச்சத்தின் காரணமாக போனஸ் ஆசனத்திற்கு சுமந்திரன் காய் நகர்த்தக் கூடும்.
 
 
கடந்த தடவை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெற்ற சுமார் 85 ஆயிரம் வாக்குகளுக்காக ஒரு போனஸ் ஆசாசனம் கிடைத்த நிலையில் செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.
 
 
அதே பாணியில் வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒரு போனஸ் ஆசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுமந்திரன் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
 
 
ஆக மொத்தத்தில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் சுமார் 3ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டாலும் கடந்த தடவை பாராளுமன்றம் சென்ற இருவர் தோற்கடிக்கப்படலாம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.