Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?
Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?
- முதல் நாளில் தி கோட் பெற்ற வசூல் எவ்வளவு?Leo vs GOAT First Day Box Office Collection : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கோட் திரைப்படம், நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தி கோட் படத்தின் முதல் நாள் வசூல்:
விஜய் ஹீரோவாக நடித்து வெளிவந்த தி கோட் (The Greatest Of All Time) திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை, அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருக்கிறார்.
தி கோட் படம், ஒரே நாளில் 126.32 கோடி வசூலித்திருக்கிறது.
லியோ படத்தின் முதல் நாள் வசூல்:
விஜய் கடைசியாக நடித்திருந்த லியோ திரைப்படம், உலகெங்கிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.142 கோடியாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படம், முதல் நாளில் அதிக வசூல் பெற்றதற்கு ஒரு காரணம் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த அதிக எதிர்பார்ப்பு. இந்த படம், எல்.சி.யூவில் இருந்ததாலும், படத்தில் எதிர்பாராத நிறைய காமியோக்கள் இருந்ததாலும் இப்படத்திற்கு மவுசு அதிகரித்தது.
அது மட்டுமன்றி, இப்படம் இந்தி மொழியிலும் வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம் இந்தி மொழியில் வெளியாகவில்லை. அது மட்டுமன்றி, லியோ படம் அளவிற்கு யாரும் தி கோட் படம் குறித்து, ரிலீஸிற்கு மூன்று நாட்கள் முன்புதான் அனைவரும் பேச ஆரம்பித்தனர். இதனாலும் முதல் நாள் வசூலில் லியோ படத்தை இப்படத்தால் மிஞ்ச முடியவில்லை என்று கூறப்படுகிறது.
தி கோட் படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?
கோலிவுட் திரையுலகின் ஜாலியான இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுபவர், வெங்கட் பிரபு. இவருடன் முதன்முறையாக நடிகர் விஜய் கைக்கோர்த்து நடித்திருக்கிறார். நடிகர் விஜய், தனது இளமை பருவத்தில் குறும்புத்தனமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது வெளியாகும் அவரது படங்கள், அவருக்கு மாஸ் படங்களாக அமைந்திருக்கிறதே தவிர, பழைய விஜய்யை எதிலுமே பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால், தி கோட் படத்தில் விஜய்யின் பழைய பட ரெஃபரன்ஸ், இன்னும் சில ஹீரோக்களின் ரெஃபரன்ஸ் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கிறது.
விஜய், கடைசியாக அழகிய தமிழ் மகன் படத்தில்தான், நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, பல வருடங்கள் கழித்து ‘தி கோட்’ படத்தில் அதை விட வில்லத்தனமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், சினேகா-விஜய்யின் ரீ-யூனியன், பிரசாந்த் மற்றும் மைக் மோகனின் கம்-பேக் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கிறது.
எதிர்பாராத காமியோக்கள்:
தி கோட் திரைப்படத்தில், யாரும் எதிர்பார்க்காத பல்வேறு காமியோ கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்த த்ரிஷா, தி கோட் திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். அதே போல, நடிகர் சிவகார்த்திகேயனும் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களை தவிர, மறைந்த நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தையும் AI மூலம் காமியோ காட்சியில் நடிக்க வைத்திருக்கின்றனர்
கருத்துகள் இல்லை