தகட்டு எழுத்துக்களும் அவை குறித்து நிற்கும் பிரிவுகளும்!


இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால் ஒன்று தொலைந்தாலும் மற்றொன்றினை வைத்து அவர் இன்னாரென்று அடையாளப்படுத்த முடியும். இம்மூன்றினுள் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும் தகடே மணிக்கட்டுத் தகடு ஆகும். இதில் மட்டும் த.வி.பு. என்று எழுதப்பட்டிருக்காது.

பெரும்பாலான கழுத்துத் தகடுகளில் குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு புலிவீரனின் உடலில் இருக்கும் இம்மூன்றிலும் ஒரே உறுப்பினர் எண்கள் & குறியீடுகளே குறிப்பிடப்பட்டிருக்கும். இம்மூன்றையும் அனைத்து தவிபு உறுப்பினர்களும் அணிந்திருப்பர்.


அ – மட்டு-அம்பாறை மாவட்டத்தை தரிப்பிடமாகக் கொண்ட அத்துணை சண்டை உருவாக்கங்களுக்கும்

ஆ – திருமலை மாவட்டம் மற்றும் அங்கு இயங்கும் படைத்துறை பிரிவுகள். உதாரணத்திற்கு: திலகா படையணி மற்றும் இளங்கோ படையணி

இ – ஆரம்பத்தில் வன்னி மாவட்டம் பின்னர் வடபோர்முனைக் கட்டளைப் பணியகம்

ஈ – மணலாறு மாவட்டம்

உ – யாழ். மாவட்டம் (1995 வரை)

ஊ – மன்னார் / திரைப்பட மொழியாக்கப் பிரிவு

எ – மாலதி படையணி

ஐ – புலனாய்வுத்துறை

ஒ – கடற்புலிகள்

ஓ – படைத்துறைப் பள்ளி

ஃ – படையப் புலனாய்வுப் பிரிவு

க – ஆரம்பத்தில் சாள்ஸ் அன்ரனி, 2002 முதல் இம்ரான் பாண்டியன் படையணி

ச – படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி

கா – ஆரம்பத்தில் சிறுத்தைப்படை (2006 இன் பின்னர் மகளிருக்கு மட்டும் கொ)

தி – சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

நா – கிட்டு பீரங்கிப் படையணி

ம – படைய அறிவியல் கல்லூரி

வ – விசேட வேவுப் பிரிவு

வா – போர்க் கருவித் தொழிலகம்

வி – கணனிப் பிரிவு

ஞ – வான்புலிகள்

ஞா – சோதியா படையணி

ஞி – குட்டிசிறி மோட்டார் படையணி

யா – பூநகரிப் படையணி

0 – 5000 – ராதா வான்காப்புப் படையணி (2002 முதல்)

0 – 5000 – 6000 – தலைமைச் செயலகம்

0 – 6000 – 9000 – அரசியல்துறை மகனார் (2007 இறுதிவரை மருத்துவப்பிரிவும் அடங்கும்)

0 – 9000 – 10000 – அரசியல்துறை மகளிர்

0 – 15000 – 18000 – பொன்னம்மான் கண்ணி வெடிப்பிரிவு

0 – 18000 இற்கு மேல் மருத்துவப் பிரிவு (2007 இறுதியிலிருந்து)

து – துணைப் படை

கா. து காவல்துறை

எ.ப – எல்லைப் படை

சி.எ.ப – சிறப்பு எல்லைப் படை

த – நிதித்துறை 0-4999 ஆண்கள், 5000 இற்கு மேல் மகளிர்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.