தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி ?
தேவை:
தேங்காய் - ஒரு மூடி, கறிவேப்பிலை - 20 இலைகள், ஊறவைத்த பாதாம்பருப்பு - 5.
செய்முறை:
தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம்பருப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய வடிகட்டியில் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். பிறகு தேங்காய் - கறிவேப்பிலை - பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
30 வகை ஈஸி ரெசிப்பி! - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்
குறிப்பு: இதில் கறிவேப்பிலைக்குப் பதிலாக, கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் சேர்த்து அரைக்கலாம்.
சிறப்பு: இந்தத் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.....
கருத்துகள் இல்லை