தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டி!


சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது. இதன் போதே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #TamilNews   #TamilDailyNews   #Website   #TamilnaduNews  #News_Paper   #Tamil_Nadu_Newspaper  #Online   #BreakingNews2024 #NewsHeadlines    #LatestUpdates #tamilcinema    #indian    #WorldNews   #TamilFilm   #Jaffna    #Kilinochchi   #Mannar   #Mullathivu  ##Batticaloa   #kandy   #SriLanka   #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.